புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக சென்ற கைதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
கணேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்திற்குள் சட்டத்தரணி வேடமணிந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்ற வளாகத்திற்குள் தற்போது சிறப்புத் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது, மேலும் அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.