சட்டவிரோத வாகனச் சாரதிகளுக்கு காரைத்தீவில் எச்சரிக்கை

0
12
காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைகவசம் அணியாமல் ஓடுபவர்கள் , வாகன அனுமதிப் பத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துவோர் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்  அதிரடியாக கைது செய்யப்பட்டுவர்.
இவ்வாறு காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாவடிப்பள்ளி ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவர்  இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள்
இரவு நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல் , வீதியில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தல் போன்ற ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர்.
மேலும் வீதிகளில் கூடி நிற்கும் வாலிபர்கள் சம்பந்தமாகவும் மற்றும்  போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மேற்படி நபர்களுக்கு எதிராக பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பூரண தெளிவினை வழங்கினார்.
காரைதீவு சிரேஷ்ட பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக இன்று மாவடிப்பள்ளி ஜும்மா தொழுகையை தொடர்ந்து காரைதீவு பொலிஸ் பிரிவின் பகுதி மாவடிப்பள்ளி பிரதேசத்திலும் கடமையில் இனி பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் இப்படி பட்ட ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில் இனிமேல் போக்குவரத்து பொலிஸார் கண்டால் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்யவுள்ளனர்.
அண்மையில் வீதி விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களினால் பள்ளிவாசலுக்கு விசேட பயான் நிகழ்ச்ச்சிக்கு சென்று வந்த நிலையில் இரு பெண்கள் வீதி விபத்துக்கு உள்ளாக்கபட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
( வி.ரி.சகாதேவராஜா)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here