சன்மான பணம் 74 இலட்சத்தை ஏப்பமிட்ட பொலிஸ் சாஜன் ஒருவர் பணியில் இருந்து இடைநீக்கம்.

0
130

பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியில் இருந்து இடை நீக்கம் செய்யுயப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சாஜன் 2021ம் ஆண்டு பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த போது அங்கு பொலிசாருக்கு சன்மானமாக வழங்கும் பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளநிலையில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக பொலனறுவை விசேட குற்றப் புலன்விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இவரை கடந்த 18 ம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

இவ்வாறு பிணையில் வெளிவந்தவரை உடனடியாக பணியில் இருந்து பொலிஸ் திணைக்களம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

(கனகராசா சரவணன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here