சம்பள உயர்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை நாளை

0
106

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நாளை 31 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செயற்படுத்தினால், தற்போது கூட நட்டத்தில் இயங்கும் தமது நிறுவனங்கள் முழுமையாக செயலிழக்கும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடாமல் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமையினால், அதனை செல்லுபடியற்றதாக்குமாறும் இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளான சோபித்த ராஜகருணா, தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் மனு மீதான விசாரணை 29 அன்று நடைபெற்றது.
இரண்டு தரப்பு வாதங்களையும் கவனத்திற்கொண்ட நீதிபதிகள் குழுhம், வழக்கு மீதான விசாரணை மீண்டும் நாளை மறுதினம் நடைபெறும் என அறிவித்தது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார , தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் ஆணையாளர் நாயகம் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் அடங்கலாக 52 தரப்பினர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் அனைத்து தோட்டங்களிலும் அடுத்த மாதம் 10 ஆம் திகதி 1700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here