அமெரிக்க தீர்வை வரி விதிப்பினால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று 10 நடைபெறவுள்ளது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தமது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சி தலைவர்கள் 12 பேர் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அவகாசம் கோரியிருந்ததாக அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.