ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் (13) சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். கடந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம்செய்திருந்த ஜனாதிபதி, ஜனவரி மாதம் சீனா செல்வதையும் உறுதிப்படுத்தியிருந்தார்.
எனினும், திகதி விவரங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தன. இம்மாதம் 13 முதல் 17ஆம் திகதிவரை அவர் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பயணத்தின் போது, சீன ஜனாதிபதி ஜின் பிங், சீனாவின் பிரதமர் மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் ஜனாதிபதி அநுர சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.