இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2729 குடும்பங்களைச் சேர்ந்த 10,885 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கேகாலை, இரத்தினபுரி, குருநாகல், புத்தளம், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 06.00 மணி நிலவரப்படி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 02 பேர் காயமடைந்துள்ளனர்.
69 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் 09 தற்காலிக பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.