எமது போராட்டதை சீர் குலைக்கும் நோக்கில் நாளை மே ( 30) திகதி இடம்பெறவுள்ள சுகயீன விடுமுறை போராட்டத்தில் இலங்கை கல்விச்சமூக சம்மேளனம் பங்குகொள்ளாது என சம்மேளனத்தின் தலைவர் சங்கர் மணிவன்னண் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது..
கடந்த காலங்களின் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளவுயர்வு உள்ளிட்ட உரிமைசார் விடயங்களை வென்றெடுக்க அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி உரிமைசார் விடயங்களுக்கு குரல் கொடுத்து வந்துள்ளது.
அதே போல இம் முறையும் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினையை கருத்திற்கொண்டு ஒன்றினைந்த கூட்டமைப்பாக எதிர்வரும் ஜூன் 07 ஆம் திகதி மாத்தறையிலும், ஜூன் 12 ஆம் திகதி கல்வி வலய மட்டத்திலும் , ஜூன் 26 ஆம் திகதி கொழும்பிலும் பாரிய போராட்டங்களை நாடத்த திட்டமிட்டுள்ளோம் எனவே எமது போராட்டத்தை சீர் குலைக்கும் வகையில் நாளை மே ( 30) திகதி சில தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டதை நடாத்த முஸ்தீபு காட்டிவருகின்றன.
எனவே நாளை இடம்பெறவுள்ள போராட்டத்தில் இலங்கை கல்விச்சமூக சம்மேளனம் பங்கு கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.