சுகாதார ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம்

0
374

பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த 8 தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

எரிபொருள் விநியோகம் முறையாக சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கைக்கு வந்ததாக அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

எனவே, இடைநிலை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணி என்ற அடிப்படையில் 8 தொழிற்றுறையினரின் இணக்கப்பாட்டுடன், இன்றும், நாளையும் கடமைக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், குடும்ப நல சேவை உத்தியோகத்தர், தொழிநுட்பவியலாளர்கள் சங்கம், ..ஜி அதிகாரிகள் சங்கம், பொது ஆய்வுக்கூட நிபுணர்கள் சங்கம், பல் சிகிச்சையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here