செப்டம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள்- வெல்லவாயவில் ஜனாதிபதி

0
61

கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களிடம் கோரியுள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே அமுல்படுத்திய வேலைத் திட்டத்திற்கே சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதிஇ மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் சஜித்துக்கோ அல்லது அநுராவுக்கோ நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத் திட்டம் இல்லை எனவும் தெரிவித்தார்.

வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”ஹம்பாந்தோட்டை கைத்தொழில்கள் அபிவிருத்தியடையும் போதுஇ ​​வெல்லவாய பிரதேசத்திலும் முதலீட்டு வலயமொன்று உருவாகும். அத்துடன்இ மொனராகலையில் விரிவான அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். இந்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையையே நாம் கேட்கின்றோம்.

இந்த நாட்டின் இளைஞர்களுக்கு 04 வருடங்களாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அடுத்த ஆண்டு அரச மற்றும் தனியார் துறையில் ஒரு இலட்சம் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். மேலும் 50இ000 பேருக்கு அவர்கள் விருப்பமான தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற நிதி உதவி வழங்கப்படும்.

இதற்கு தொங்குபாலத்தில் பயணத்தை முடிக்க வேண்டும். நாம் இன்னும் சிறிது தூரம் செல்ல வேண்டும். தொங்கு பாலம் கொஞ்சம் ஆடுகிறது. செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் தங்கள் கடமையை நிறைவேற்றினால் இந்த தொங்கு பாலத்தின் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும். இன்று தொங்கு பாலத்தை கடக்கும் குழந்தையின் உரிமையை எடுக்க இரண்டு பேர் தயாராகிறார்கள். இருவரிடம் எந்தத் திட்டமும் கிடையாது. எனவேஇ நாட்டின் எதிர்காலத்தை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. நாம் முன்னேற வேண்டுமானால்இ ஐஆகு ஆதரவுடன் முன்னேற வேண்டும். அரசாங்கம் இதுவரை செயல்படுத்தி வரும் திட்டத்திற்குத் தான் அதன் ஆதரவு உள்ளது.” என்றார்.

​​முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார என்னை விவாதத்திற்கு அழைத்தார். நான் அதற்கு தயார் என்று அறிவித்துள்ளேன். ஆனால் இன்னும் அழைப்பு வரவில்லை. இன்றும் நான் அதற்கு தயாராக இருக்கிறேன். அவர்களால் ஏன் விவாதத்திற்கு வர முடியாது? அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதாலே பின்வாங்குகின்றனர். அனைத்தையும் இலவசமாக கொடுப்பது பற்றித் தான் சஜித் பேசுகிறார். தலை வலியையும் அவர் இலவசமாக கொடுப்பார். ஆனால் நாம் கடினமாக பெற்ற வெற்றியைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். இதற்காக செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்காக அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர

”தேர்தலின் வெற்றி அலைஇ தேர்தல் பிரச்சாரத்தின் முடிவிலேயே தொடங்குகிறது. ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்கூட்டடித் தயாராகிய அனைவரும் தோற்றனர். கடைசி நிமிடத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்றைய நிலையில்இ மொனராகலை மட்டுமன்றி முழு இலங்கையினதும் ஆதரவைப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

அத்துடன்இ இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 பேரில் யார் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். யாராலும் முடியாது என்று சொன்னதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘இயலும்’ என்று செய்து காட்டிவிட்டே உங்கள் முன்வந்துள்ளார். குழுவாகஇ நாங்கள் அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். ஏனெனில் அவருக்கு ‘இயலும்’ என்று எங்களுக்குத் தெரியும்.

நான் விவசாய அமைச்சராக அமைச்சுப் பொறுப்பை ஏற்றபோது விவசாயிகளுக்கு உரம் இல்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை ஏற்று விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு செய்தார். அதனால்இ இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நெல் விவசாயிகளுக்கு மட்டுமின்றி மற்ற விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாரம்பரிய விவசாயத்தில் இருந்து கடந்துஇ நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 – 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தைத் தயாரித்துள்ளது. சவால்களை ஏற்றுக்கொண்டால்இ அந்த சவாலை நாம் வெல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கிறோம். இன்று நாடு அழிந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். இந்த அழிவுக்கு சஜித் பிரேமதாச மற்றும் அனுரகுமார ஆகியோரும் உடந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜே.வி.பி.யே அப்போது இந்த நாட்டை வங்குரோத்தாக்கியது. அன்று சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்துள்ளனர்.

குறைந்த பட்சம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவும் அவர்களுக்கு உரிமை இல்லை. ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு டீக்கடையைக் கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அன்றிஇ இந்த நாட்டை வெற்றிபெறச் செய்யவேஇ கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரஇ

”ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய கட்சிகள் தமது பேரணிகளுக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்துள்ள போதிலும்இ ஏனைய மாவட்டங்களில் இருந்து எவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ளவில்லை. இந்த மாவட்டத்திற்கு வெளியே யாரேனும் பேரணியில் பங்கேற்றிருந்தால்இ அதை நிரூபிக்குமாறு அச்சமின்றி சவால் விடுகிறேன்.

சஜித் பிரேமதாச 2022இல் போராட்ட களத்திற்கு சென்று சுசந்திகா ஜயசிங்கவை விட வேகமாக ஓடினார். அனுரகுமார திஸாநாயக்க போராட்டம் நடந்த பகுதிக்கு வந்துஇ ‘நாம் வீதியில் பார்த்துக்கொள்வோம்’ என்று கூறி இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொன்றார். ஒவ்வொரு நகரத்திலும் டிரான்ஸ்போர்மர்கள் மற்றும் பேருந்துகள் எரிக்கப்பட்டன.

அப்போது நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இல்லை. இதைப் பொறுப்பேற்றால் இரண்டு வருடங்களின் பின்னர் என்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என்று அனைத்துத் தலைவர்களும் கூறியபோதுஇ ரணில் விக்ரமசிங்க தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும்இ நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்களுக்குள் வரிசைகளை இல்லாதொழித்தார்.

இன்று மக்கள்இ ரணில் விக்ரமசிங்கவை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய மற்றும் வரிசைகளை நீக்கிய நாயகனாக மதிக்கின்றார்கள். எனவே இம்மாதம் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் குமாரசிறி ரத்நாயக்க

”அந்த நெருக்கடியான நேரத்தில் நாட்டைப் பொறுப்பேற்றபோதுஇ ​​ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடியாது என்று பலர் நினைத்தார்கள். மேலும் அவர் தோல்வியடைந்து வெளியேறுவார் என்று எண்ணியவர்களும் இருந்தனர்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாள் முதல் தனது சர்வதேச தொடர்புகள் ஊடாக ஆதரவைப் பெற்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வைத்தார். எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. விவசாயிகளுக்கு உரம் கொடுத்து இந்த நாட்டை விவசாயிகள் மூச்சுவிடக்கூடிய நாடாக மாற்றினார். அதன் பிறகுதான் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வலுவான பணி தொடங்கியது.

அதற்கு அவரை ஆதரித்த குழுக்கள் என்ற வகையில்இ இந்த மேடையில் உள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் அடுத்த ஐந்தாண்டுகளில் அவரது தலைமையை எதிர்பார்க்கின்றனர். அதன்கீழ் இந்த நாட்டை மேம்படுத்திஇ மக்களின் வாழ்க்கையை மேலும் ஸ்திரப்படுத்த முடியும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் செய்த விடயங்களுக்காக மாத்திரமன்றிஇ அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் செய்ய வேண்டிய பணிகளுக்காகவும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் அவரை தெரிவு செய்ய வேண்டும்.

அதற்காக செப்டெம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து நாட்டை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவநந்த

2022 மார்ச் இல்இ இந்த நாட்டின் சிறந்த தொழில்முனைவோரில் ஒருவரான தம்மிக பெரேரா என்னிடம் ‘இந்த நாட்டை மீட்க முடியாதுஇ நாடு வீழ்ந்து விட்டது’ என்றார். பாண் வாங்க கரத்தையில் பணம் செல்ல நேரிடும்’ என்றார். அதைக் கூறிய போது வெல்லஸ்ஸவில் களிமண் வீட்டில் வசிக்கும் மக்களை நினைத்து வருத்தம் அடைந்தேன். என்னுடைய நாட்டு மக்கள் அழிந்து போகும் நிலையில் இருப்பதாக உணர்ந்தேன்.

பல வருடங்களாக அரசியலில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அன்று நாட்டைப் பொறுப்பேற்கவில்லை. அவர் ஏற்றுக்கொள்ளாதது நாட்டை அல்ல. உங்களின் வாழ்க்கையை. அப்படி நம் வாழ்வை ஏற்காத பலரும் உள்ளனர். சஜித் பிரேமதாஸ மாத்திரமன்றிஇ அநுரகுமாரஇ சரத் பொன்சேகாஇ டலஸ் அழகப்பெரும யாரும் எமது வாழ்க்கையைப் பொறுப்பேற்கவில்லை.. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே எமது வாழ்வைப் பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவில் முதிர்ந்தவர். அவர் வெளிநாட்டு தொடர்புகளில் உயர்ந்தவர். அப்படிப்பட்ட ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. சஜித் பிரேமதாஸவால் நாட்டை உருவாக்க முடியாது. எனவேஇ அவருடன் இருப்பவர்களையும் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். வெற்றி பெறும் வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எம்முடன் இருக்கின்றார். நான் சஜித்தை ‘பொய்ப் புழுகர்’ என்றுதான் அழைக்கிறேன்.” என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜித் விஜிதமுனி டி சொய்சா

”மொனராகலை ஜனாதிபதிகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மாவட்டமாகும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இம்மாவட்டத்தை வெல்வது சவாலில்லை. முன்னாள் ஜனாதிபதிகளை உருவாக்கிய தலைவர்களும் இன்று இந்த மேடையில் உள்ளனர். எனவே எதிர்வரும் 21ஆம் திகதி இந்நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி நடத்தும் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பதாக சில தொலைக்காட்சி அலை வரிசைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் அவர்களின் கூட்டங்களுக்கு வருகின்றனர். அந்த அலை வரிசைகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மூலம் மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள் விடுதலை முன்னணிக்கு வெட்கமில்லை. இவர்களின் கொலைகளுக்கும்இ மக்களை அச்சுறுத்தும் அரசியலுக்கும் முடிவு கட்ட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டிற்கு தனது தலைமைத்துவம் தேவைப்பட்ட வேளையில் இந்த நாட்டை பொறுப்பேற்றார். இந்த நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் நேரத்தில் அவரை மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கின்றோம் என்றே கூற வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியானது. அந்த வெற்றியில் ஊவா வெல்லஸ்ஸ மக்களும் பங்கு கொள்வது அவசியம். அதற்கு கேஸ் சிலிண்டரின் முன் புள்ளடி இடுமாறு நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்.” என்றார்.

மகா சங்கத்தினர் உட்பட ஏனைய மதத் தலைவர்கள்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலஇ முன்னாள் மாகாண சபை தவிசாளர்களான தமயந்த தொலேவத்தஇ ரோஹண வன்னியாரச்சிஇ ஆர். எம். ரத்னவீரஇ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரியந்தி மங்கலிகாஇ வெல்லவாய ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் நிலந்த பண்டாரஇ மொனராகலை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பாளர் திலும் ஜயசேகர மற்றும் பிரதேச அரசியல் தலைவர்கள்இ தொகுதி அமைப்பாளர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு- -‘இயலும் ஸ்ரீலங்கா’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here