ஜனாதிபதியின் முன்மொழிவை நான் வரவேற்கின்றேன் – ராதா எம்.பி

0
210
புதிய வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இலங்கையில் ஆரம்பிக்கலாம் என் பிரேரனையை முன் மொழிந்துள்ளார். இதனை நான் வரவேற்கின்றேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
அமெரிக்கா முத்தமிழ் பல்கலைக்கழகத் துடன் இணைந்து செயலாற்றும் குளோபல் கலை கல்லூரியின் பட்டமளிப்பு விழா நுவரெலியாவில்  சனிக்கிழமை பிற்பகல் (10) நுவரெலியா புதிய நகர மண்டபத்தில்  இடம்பெற்றது.
இலங்கையின் மலையகம் மற்றும் வடகிழக்கு உட்பட பல மாகாணங்களிலிருந்து  சுமார் 210 பேர் இந்த பட்டமளிப்பு விழாவில் தங்களுடைய பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் பணிப்பாளர் செல்லதுரை பிரதீஷ் குமார் தலைமை தாங்கியதுடன் பிரதம அதிதியாக முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
அத்துடன் இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் நாகர்கோவில் மாவட்டங்களில் இருந்து வருகை தந்த நடனத்துறை கலைஞர்களும் ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்ட முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் அங்கு உறையாற்றுகையில்,
கடந்த காலங்களில் மாலைதீவு, அவுஸ்திரேலியா,இந்தியா,பங்களாதேஷ்,  ரஷ்யா  போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி கற்பதற்காக இலங்கை மாணவர்கள் செல்ல வேண்டியுள்ளது. ஏற்கனவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் மக்களின் போராட்டங்களால் இடை நிறுத்தப்பட்டன.  இலங்கையில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஆரம்பிப்பபதற்கு அனுமதிக்கவில்லை. அதனால் பெருமளவிலான மாணவர்கள் வெளிநாடு சென்று பட்டப்படிப்புகளை படித்து வந்தனர்.இதனால் எங்களுடைய நாட்டு பணம் வெளிநாடுகளுக்கு சென்றது.
இனிமேல் மாணவர்கள் உயர் கல்விக்காகவெளிநாடுகளுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. இலங்கையிலே உயர் கல்வியை தொடரலாம். எமது நாட்டு நிதியை வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கலாம். அந்த நிதியை எமது  நாட்டில் மிகுதி பிடிக்ககலாம்.அந்த வகையில் எமது நாட்டின் அபிவிருத்தியையும் அதிகரித்துக் கொள்ளலாம்.
இந்த பட்டமளிப்பு வைபவம் இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு நிறுவனத்துதுடன் தொடர்புபடுத்தி நடத்திய செல்லத்துரை பிரதிஷ்குமாரை பாராட்டுகிறேன். இந்த மாதிரியான முன்னேற்றங்கள்  மலையக பகுதியில் வரவேண்டும்.இந்த பட்டளிப்பு வைபவம் இந்தியா இங்கிலாந்து இலங்கை இணைந்து முதல் தடவையாக நுவரெலியாவில் இம்மாதிரியான பட்டமளிப்பு வைபவம் நடைபெற்றுள்ளது.
இதனை ஏற்பாடு செய்த பிரதிஷ் குமாரை பற்றி ஒருசில வார்த்தைகள் கூற விரும்புகின்றேன். அவர் 2005 ஆம் ஆண்டு நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்கு நடன ஆசிரியராக நியமனம் பெற்று வந்து பல பரத நாட்டிய கலைஞர்களை உறுவாக்கியதோடு பல பரதநாட்டியம் அரங்கேற்றங்களையும் இதே மண்டபத்தில் நடத்தியுள்ளார். இன்று அவர் இங்கிருந்து இங்கிலாந்து சென்றாலும் இந்த நுவரெலியா மண்ணை மறக்காமல் இந்த மண்ணுக்கு சேவை செய்வதற்கு இங்கு வந்து இப்படியான ஒரு சேவை செய்ததையிட்டு அவரை எனது இதயம்கனிந்த மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த காலங்களில் நுவரெலியா பொன்ற மலையக பகுதியில் பரத நாட்டியத்திற்கு முக்கியதுவம் வழங்கப்படவில்லை கடந்த 1990 ஆம் ஆண்டிற்கு பின்னர்தான் நுவரெலியா பொன்ற மலையக பிரதேசங்களில்  பரத நாட்டியம் அபிவிருத்தியடைந்தது. பாடசாலைகளிலும்பரத நாடியம் கற்பிக்கப்பட்டு தேசிய மட்டத்திலும் முதலாம் இடங்களை பெற்றதும் குறிப்பிடத்தக்கது என இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 நூரளை ரமணன் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here