வாக்காளர் இடாப்பை அச்சிடுவதற்குப் பதிலாக 14,000 கிராம சேவைப் பிரிவுகளை உள்ளடக்கிய பகுதிகளில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்கான விரிவான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தலகள் ஆணையாளர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (29) நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
டிஜிட்டல் பெயர் கொண்ட வாக்காளர் பதிவேட்டைத் தயாரிப்பது குறித்து கிராம அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதற்குப் பங்களித்த 42 கிராம அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காகிதத்தில் தரவுகளைப் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் வாக்காளர் பதிவேடு தயாரிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவிருக்கும் தேர்தல் 2024 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதிக்குள் 18 வயதை அடையும் இளைஞர்களும் புதிய பதிவேட்டில் சேர்க்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.