தனியார் துறை ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பு

0
60

ஜனாதிபதித் தேர்தலில் தனியார் தொழில் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவது குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதற்கிணங்க, தொழில் நிறுவனத்திலிருந்து 40 கிலோ மீற்றருக்குட்பட்ட தூரம் செல்ல வேண்டிய வாக்காளருக்கு 1/2 நாள் விடுமுறையும், 40 – 100 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டிய வாக்காளர்களுக்கு முழு நாள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என, அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், 100 – 150 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டிய வாக்காளருக்கு 1 1/2 நாள் விடுமுறையும், 150 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரத்தையுடைய வாக்காளர்களுக்கு 2 நாள் விடுமுறையும் வழங்கப்படல் வேண்டும் எனவும், தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு மேலும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here