செப்டெம்பர் மாதம் 4, 5, 6 ஆம் திகதிகளில் ஜனாதிபதி தபால் மூல வாக்களிப்பை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக செப்டம்பர் 11 , 12ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 26ஆம் திகதி தபால் வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நாட்களில் மாவட்ட செயலாளர், தேர்தல் அலுவலகம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.