தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது. நாம் ஒருசேரத்தான் முடிவுகள் எடுப்போம்
என மனோகணேசன் எம். தனது முகப்புத்தகத்தில் பவிதிட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணி, அரசுடன் இணையவோ, அமைச்சு பதவிகள் பெறவோ, தீர்மானிக்கவே இல்லை. உண்மையில், “நாட்டை கரை சேர்க்க தேசிய சர்வ கட்சி வேலைத்திட்டம்” என்ற தலைப்பில் ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கான எமது பதில் தொடர்பில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள்ளே நாம் கடுமையாக இரவு பகல் உரையாடிக்கொண்டு இருக்கிறோம்.
ஜனாதிபதியை, ஐக்கிய மக்கள் கூட்டணியாக 5ம் திகதி சந்தித்தோம்.
தமிழ் முற்போக்கு கூட்டணியாக 10ம் திகதி சந்திக்க உள்ளோம். நாம் பிரதிநிதித்துவம் செய்யும் எமது மக்களின் அபிலாஷை சவால்கள் பற்றி உரையாடுவோம்.
இதற்குள் “அமைச்சு பதவிகளுக்காக கூட்டணிக்குள் முரண்பாடு” என “பொறுப்புள்ள தினக்குரல், காலைக்கதிர்” உட்பட சில மஞ்சள், கடும் மஞ்சள், இணையங்கள் எழுதுகின்றன.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள், “டலசுக்கு எத்தனை பேர், ரணிலுக்கு இத்தனை பேர்” என கும்மி அடித்து, சிரித்து முடித்தாகி விட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.