தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் , இந்நாள் உறுப்பினர்களுக்கிடையே இன்று பிற்பகல் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
தனியார் nதொலைக்காட்சியொன்றின் சமர் என்ற விவாத நிகழ்ச்சியில் பங்குகொண்டிருந்தம வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
அது தொடர்பான காணொளிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலாகியுள்ளது.
விவாத நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் உறுப்பினர் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் ஆகியோருக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளதாக காணொளியின் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது.