கர்ப்பிணித் தாய்மார்கள் , குழந்தைகளுக்கு போஷாக்கை பெற்றுக் கொடுக்கும் திரிபோஷ நிறுவனத்தை நவீனமயப்படுத்தி, அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல அரசு திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் கந்தானையிலுள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்து அதனை அரச நிறுவனமாக தொடர்ந்து நடத்துவதே இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் (04) நடத்திய கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.