மித்தெனிய, சதொஸ்மாதகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் பிரயோகத்தில ஒருவர் உயிரிழந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். நேற்று இரவு அவர் தனது மனைவியுடன் உறவினர் வீட்டிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.