துப்பாக்கி குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் அறிவிப்பு

0
170

தனிப்பட்ட பாதுகாப்புக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு   வழங்கப்பட்ட கைத்துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் தாமதமின்றி திருப்பி ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிகளைப் பெற்ற முன்னாள் எம்.பி.க்களுக்கு, தனித்தனியாகக் கடிதம் அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அப்போதைய அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன, நாட்டில் நிலவும் வன்முறை போக்கு காரணமாக, முன்னாள் எம்.பி.க்கள் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்ததாக தெரிவித்திருந் தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here