நாசிவந்தீவில் உள்ள தும்பு தொழிற்சாலையிலேயே திடீர் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்வத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் கல்குடா பிரதேசத்தில் தீயணைப்பு வாகனம் ஒன்று இல்லாததன் காரணமாக தீயணைப்புப் பணிகள் சற்று தாமதமானதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக செயற்பட்டு தீயை அணைக்க தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் ஊர் மக்கள் பெரிதும் உதவியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.
அத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சகோறளைப்பற்று பிரதேச செயலக டிடிபி. கங்காதரன் வருகை தந்ததுடன், கோறளைப்பற்று பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஊழியர்களும் செயற்பட்டு நீர் பவுசர் மூலம் தீயை அணைத்தனர்.