அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை தனதாக்கியது 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டி 06.11.2022 இல் கொழும்பு இந்து மகளிர்கல்லூரியில் இடம்பெற்றது.
இப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரு வெள்ளிப் பதக்கங்களை தனதாக்கியது மட்/சிவானந்த வித்தியாலயம்.
இதில் குழு இசை நிகழ்ச்சியில் திருமதி.ஜெ.கலிங்கேஸ்வரன் ஆசிரியரின் வழிப்படுத்தலில் பங்குகொண்ட மட்/ வானந்தவித்தியாலய மாணவர்கள் இரண்டாம் இடத்தினை பெற்று வெள்ளிப் பதக்கத்தினை தமதாக்கிக்கொண்டனர்.
அத்தோடு தனி இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செல்வன்.சிற்சபேசன் இரண்டாம் இடத்தைப்பெற்று வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கிக்கொண்டு கிழக்கு மாகாணத்திற்கும் தமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார்.