தேயிலையை ஏற்றுமதி செய்து கூட நாட்டுக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை – சஜித்

0
266

தேயிலையை ஏற்றுமதி செய்து கூட நாட்டுக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு எமது நாடு வங்குரோத்து நிலையை எட்டியுள்ளது என்கிறார் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ.

தேயிலை ஏற்றுமதி ஊடாக நாட்டிற்கு தேவையான டொலரையும், ஏனைய இறக்குமதிகளையும் செவ்வனே செய்து கொள்ள முடியும், ஆனால் தேயிலையை ஏற்றுமதி செய்து கூட நாட்டுக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு எமது நாடு வங்குரோத்து நிலையை எட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர் கட்சிதலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை கொட்டகலை கேம்பிரிட்ஜ் தேசிய கல்லூரி க்கு பேருந்தொன்றினை கையளித்த போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட தமிழ் முற்போக்கு கூட்டிணியின் பிரதி தலைவர்களான பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் மத்திய மாகான சபை முன்னாள் உறுப்பினர் சோ.சிறிதரன் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக்க சேபால, பிரதேச சபை உறுப்பினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ,
செழிப்பான தேயிலை வளரும் பூமியானது இன்று கேட்பார் அற்ற பற்றை காடுகளாக மாறியிருக்கிறது. எமது நாட்டிற்கு தேயிலை ஏற்றுமதியின் ஊடாக டொலர்களை கொண்டு வருவதற்கான புதிய திட்டங்களை உருவாக்க முடியும். மொட்டு கட்;சியினை

பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானோர் இனவாதத்தை கட்டி பிடித்துக்கொண்டு இன்று கைகளை உயர்த்தி பேசுகின்றார்கள். நாங்கள் அன்று கூறிய அனைத்தும் இன்று நடைமுறைக்கு வந்திருக்கிறது. எதிர் காலத்தில் அமைக்கப்படும் எங்கள் அரசாங்கத்தின் ஊடாக தேயிலை கூலித்தொழிலாளிகளை சிறுதோட்ட உரிiயாளர்களாக மாற்றியமைப்பதற்கான திட்டத்தினை முன்னெடுப்பதோடு முதலீட்டுக்களை ஊக்கிவிக்கும் வியூகங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிற்போம்.

கூலித்தொழிலாளிகளை அன்று சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவோம் என கூறியபோது, சிலர் ஏளனம் செய்தார்கள். என்னை விமர்சிப்பதாக என்னி எம் மீது சேர் பூசிய மொட்டு கட்சி காரர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார நிலையை
அகால பாதாளத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள். ஒவ்வொரு தேயிலை செடியின் கீழும் சோகங்கள் சோர்ந்துள்ளன. தேயிலை தோட்டத்தொழிலாளர்களின் கண்ணீர் துளிகளுக்கு காரணமானவர்களும் இந்நாட்டை நாசமாக்கிய ராஜபக்ஸ குடும்பத்தினரே தான் பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டு மக்களுடைய இயல்பு வாழ்க்கை நிலைமையை எரித்து சாம்பலாக்கி, தற்பொழுது சாம்பலை தூசு தட்டி விட்டு எழும்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் மீண்டு எழ வேண்டுமா அல்லது எழ வேண்டாமா என்பதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

இன்று இந்நாட்டை ஆள்பவர்களும், ஆலோசனை வழங்குபவர்களும்,
நடைமுறைப்படுத்துவபர்களும் கொள்ளையர்களே என குறிப்பிட்டார்.
எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here