சம்பளப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டி சுகவீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிபர் – ஆசிரியர் சம்பள சமத்துவமின்மைக்கு எதிரான தேசிய சங்கத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றுடன் 29 நாட்களை கடந்துள்ளது.
இதன் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிய குழுவின் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த தெரிவித்தார்.