தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் (08.01.2025.புதன்கிழமை) தலவாக்கலை, லோகி தோட்டப்பகுதியில் உள்ள பயிற்சி நிலையத்தில் இந்த நேர்முக தேர்வு இடம்பெற்றது.
இந்த நேர்முக தேர்வில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டதோடு இந்த நேர்முக தேர்வை தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை காரியாலயம் பிராந்திய காரியாலயம் மற்றும் முகாமையாளர்களினால் நடாத்தப்பட்டது.
இதன் போது காரியால குமாஸ்தாக்கள் . வெளிகள உத்தியோகத்தர்கள்.தேயிலை தொழிற்சாலை உத்தியோகத்தர்கள் ஆகிய தொழில்வாய்பிற்கான தேர்வுகளுக்கான தெரிவுகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த தேயிலை துறையினை தெரிவுசெய்தவர்கள் எதிர் காலத்தில் சிறந்த நிலையில் இந்த பயிற்சிகளை முறையாக கற்றுக்கொள்ளும் பட்சத்தில் உதவி முகாமையாளர் அல்லது ஒரு தோட்டத்தின் முகாமையாளராக செல்வதற்கு வாய்புகள் உள்ளது இவர்களுக்கான பயிற்சிகளை மேற்காள்ள தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊடாக பாரிய நிதி செலவிடப்படுகிறது தேயிலை துறையில் டொடலரின் விலை அதிகரித்தாலும் குறைந்தாலும் பிரச்சினையினை எதிர்நோக்க வேண்டியது தேயிலைத் துறை.
ஆகையால், தேயிலை துறைக்கும் எமது நிறுவனத்திற்கும் பொருத்த மாணவர்களை நாம் தெரிவு செய்வோம் இதுவரையிலும் தேயிலை துறையில் தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் முதலாமிடத்தை தக்கவைத்து கொண்டு வருகிறது.
இலங்கையில் முதலாவது இடத்தை பிடித்துள்ள எமது பெருந்தோட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பங்களை தாங்கள் கொடுப்பதற்கு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் என நேர்முக தேர்வினை நடாத்திய முகாமையாளர்கள் தெரிவித்தனர்.
எஸ்.சதீஸ்