இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியின்; மிதி பலகையில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று திங்கட்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
பாணந்துறை டிப்போவுக்கு சொந்தமான பஸ், பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி கொஸ்வத்தை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, பஸ்ஸின் பின் பகுதி மிதி பலகையில் இருந்த நடத்துனர் மற்றும் பயணியொருவரும் தூக்கி வீசப்பட்டு விழுந்துள்ளனர்.
விபத்தில் இருவரும் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நடத்துனர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.