2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தல் நிறவடைந்து புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கா தெரிவு செய்யப்பட்டதையடுத்து , பின்ன பிரதமர், சிறி அமைச்சரவையும் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்றம் நேற்று 24ஆம் திகதி கலைக்கப்பட்டுள்ளது.
அதற்கான உத்தியோகப்பூர்வ வர்த்தமானி அறிவித்தலிலும் ஜனாதிபதி கையொப்பம் இட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் ஒக்டோபர் முதல் வாரத்தில் வேட்புமனு கோரப்படும் எனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாரர்ளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு ஒக்டோபர் 4 முதல் 11 வரை ஏற்கப்படும் எனவும் நவம்பர் 21 இல் புதிய பாராளுமன்றம் அறிவித்தல் விடுக்கபட்டுள்ளது.