40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளதாகவும் அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும் பெற்றோல் தாங்கிய கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்.
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தொடர்ந்து விநியோகம் செய்து வந்தாலும், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் மிக நீண்ட வரிசைகள் உள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் எரிபொருள் விநியோகத்தை நிர்வகிப்பதற்காக புதிய மென்பொருள் ஒன்றும் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.