நான்கு கைகள், மூன்று கால்கள் மற்றும் ஒரு ஆண்குறியுடன்  ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்

0
212

நான்கு கைகள், மூன்று கால்கள் மற்றும் ஒரு ஆண்குறியுடன் இரட்டைக் குழந்தைகள் இந்தோனேசியாவில்   ஒட்டிப்பிறந்துள்ளனர்.

இரண்டு மில்லியனுக்கு ஒருவர் எனும் முறையில் மிகவும் அரிதாக இவ்வாறான குழந்தை பிறப்புகள் இடம்பெறுவதாக மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக பிறக்கும் இரட்டைக் குழந்தைகளை இஷோபேகஸ் த்ரிபஸ் (Ischiopagus Tripus) என மருத்துவப் பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

இந்த வகை இரட்டையர்கள்  ‘சிலந்தி இரட்டையர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இந்தோனேசியாவில் 2018 ஆம் ஆண்டு இந்த இரட்டைக்குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், இவர்களின் இந்த அரிதான பிறப்புக் குறித்த தகவல்கள் தற்போது தான் வௌிச்சத்திற்கு வந்துள்ளன.

அமெரிக்க மருத்துவ இதழ் இது பற்றிய அறிக்கை ஒன்றை தற்போது தான் வௌியிட்டுள்ளது.

உடலின் மேற்புறத்தில் அல்லாமல் கீழ்ப்புறத்திலும் ஒட்டிப் பிறந்துள்ள இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் பிரிப்பது மிகவும் சிக்கலானது. இந்த வகை இரட்டையர்களில் ஏதேனும் ஒரு குழந்தை உயிரிழப்பதற்கே 60% வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

ஆனாலும், அதிசயிக்கத்தக்க வகையில் இந்த இரட்டையர்கள் இன்னும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களது உடல் அமைப்பின் காரணமாக, முதல் மூன்று வருடங்கள் அவர்களால் எழுந்து உட்கார முடியாத நிலை இருந்தது. இதனால், படுக்கையிலேயே அக்குழந்தைகள் இருக்கும் நிலை ஏற்பட்டது.

அண்மையில் மருத்துவர்கள் செய்த அறிவைசிகிச்சை காரணமாக தற்போது அவர்களால் எழுந்து அமர முடிவதாக அமெரிக்க மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here