எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது சொகுசு வாகனம் ஒன்று மோதியதில் 13 மோட்டார் சைக்கிள்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கிச் சென்ற வாகனமே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தின் சாரதி கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.