நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்தை பொலிஸ் பிரிவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் மரணமானார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற வரே யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலியாகினார். நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்குராங்கெத்தை பொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர்.