நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் காணவில்லை!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பம்பரகலை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுந்தரலிங்கம் சசிதரன் என்ற குறித்த இளைஞன் கடந்த 03.08.2022 முதல் காணாமல் போன நிலையில் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் இதுவரை இளைஞனை கண்டுபிடிக்கப்படவில்லை.
20 வயதுடைய குறித்த இளைஞன் வீட்டில் இருந்து நுவரெலியா பிரதான நகருக்கு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை. என குறித்த இளைஞனின் பெற்றோர்கள் கடந்த 6 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே இந்த இளைஞனை கண்டவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(076-3497788 ஆனந்தராஜ்)