நுவரெலியாவில் இருந்து ஹட்டன் செல்லும் A7 பிரதான வீதியில் கற்பாறைகளுடன் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
டெஸ்போர்ட் வழியாக மெராயா செல்லும் பகுதியிலே இன்று மாலை மண்சரிவு இடம்பெற்றுள்ளது.
வீதியில் கிடக்கும் கற்பாறைகள், மண்திட்டினை அகற்ற இதுவரை வீதி அதிகாரசபை நடவடிக்கை எடுக்காமையினால் அவ் வழியாக செல்லும் வாகன சாரதிகள் பெறும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே. கவிஷான்