விளையாட்டு கல்விக்கு ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துக் காட்டிய கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரியின் மாணவி N. மதுமேத்தா,
உயிர் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் நுவரெலியா மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2021/2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் உயிர் முறைகள் தொழிநுட்ப பிரிவில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்று பாடசாலைக்கும் சமூகத்துக்கும் தனது தாய் தந்தையருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவி கல்வியில் மட்டுமின்றி விளையாட்டிலும் தனது திறமையை நிரூபித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கான கிரிக்கெட் அணியின் தெரிவுக்காக இம் மாணவி கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெரிவுக் குழாமில் இடம்பெற்றிருந்தார்.
இவர் தனது ஆரம்ப கல்வியை ஹேவாஹேட்ட முல்லோய தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றதுடன் உயர்தர கல்வியை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் உயிர் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் பயின்று இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பல்வேறு பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில் இவரது கல்வியை தொடர்வதற்கு இவரது தமக்கை தமயந்தி தனுஷ்கா இவருக்கு பாரிய உதவியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கேம்பிரிட்ஜ் கல்லூரியில் இருந்து உயிர் முறைகள் தொழிநுட்ப பிரிவில். மாவட்ட ரீதியாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்.
Y.RISHANI PRADEEPA (D.RANK – 4th)
B.MIRUBAN – ( D.RANK – 6th)
S.VISHANTHANI ( D.RANK -28)
M.PRADEEPA ( D.RANK -42)
K.NAVANEEDHA PRIYA ( D.RANK- 46)
S.DDHILAKSHI ( D.RANK -49)
F.CHRISTINA ( D.RANK -54)
R.SHARMILA ( D.RANK – 58)
J.SAJITHA ( D.RANK – 67)
V.VISHALINI ( D.RANK – 68)
T.PRADIKSHA ( D.RANK – 70)
இயந்திரவியல் தொழிநுட்ப பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்
J.DHANUSHIYA ( D.RANK -09)
N.DHARSHA ( D.RANK -17)
N.SANJEEWAN ( D.RANK – 57)
S.SRIDHARSHINI ( D.RANK – 66)
தகவல்- B.Sharansing, S.F.T. Subject teacher- Cambridge College.