நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று

0
80

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் காயத்ரி பீடத்தில் இந்தியா நர்மதா நதியில் கண்டெடுக்கப்பட்ட 108 பாண லிங்கங்கள் பஞ்சகுண்ட பிரதிஷ்டா மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை 9.10 மணி முதல் 10.12 மணிவரையான சுப முகூர்த்த வேளையில் நடைபெறும்.

இதனை முன்னிட்டு (6) ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் 108 பாண லிங்கங்களினதும் புனித நதி தீர்த்த ஊர்வலம் கோலாகாலமாக நடைபெற்றது.

நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பாரத நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது புனித நதிகளான நர்மதா, சிந்து, யமுனா, சரஸ்வதி, காவேரி, பிரம்மபுத்திரா, கங்கா, கிருஷ்ணா, கோதாவரி, இவைகளுடன் திருவேணி மகா கும்பமேலா தீர்த்தமும் மற்றும் இந்தியா நர்மதா நதியிலிருந்து கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட 108 பாண லிங்கங்கள் ஜேர்மன் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது .

இந்த 108 பாண லிங்கங்கள் சுவாமி முருகேசு மகரஷியின் தவத்தின் மூலம் ஜேர்மன் நாட்டில் இருப்பதை தெரிந்துக் கொண்ட பின் அவரின் வேண்டுக்கோளுக் கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து நுவரெலியா இலங்காதீஸ்வரர் ஆலயத்திற்கு கடந்த 25 வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டது.

அந்த 108 பாண லிங்கங்களும் இன்று 10ஆம் திகதி காயத்ரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு லிங்கங்கள் மற்றும் புனித தீர்த்த நீரும் ஊர்வலமாக கண்டி வீதி,பழையகடை வீதி,புதியகடை வீதி, தர்மபால சந்தி, உடபுசல்லாவ வீதி, விசேட பொருளாதார மத்திய நிலையம் வீதி, லேடிமெக்லம் வீதி வழியாக ஊர்வலம் ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலய காயத்ரி பீடம் சென்றடைந்தது.

கும்பாபிஷேகம் பெருவிழாவை முன்னிட்டு (06) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிரியா கால நிகழ்வுகள் காலை 5.30 மணிக்கு விநாயகர் வழிப்பாடு புண்ணியாக வாசனம் தேவ பிராமண அனுஞ்ஞை முகூர்த்தப் பத்திரிக்கை வாசித்தலுடன் ஆரம்பமாகியது.

நானுஓயா நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here