நோர்வூட் பொலிஸ் பிரிவிட்குற்பட்ட தரவளை தோட்ட பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
டங்கல் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் முருகானந்தம் அபிஷேக் என்ற மாணவரே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்லாத காரணத்தினால் பாடசாலை செல்லுமாறு பெற்றோர்கள் அறிவுறுத்தியதாகவும் அதன் பின்னர் இன்று காலை பாடசாலைக்கு செல்லுமாறு பெற்றோர் வலியுறுத்திய நிலையில் காலை 06 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த மாணவனை காணவில்லை என பெற்றோர் தேடியபோதே வீட்டிற்கருகிலுள்ள பட்டியொன்றில் சுருக்கிட்ட நிலையில் காணப்பட்டுள்ளார் என தெரிய வருகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்