பாடசாலை மாணவர்களை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் மாத்திரமே பாடசாலை மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களை வீண் சோதனை செய்வதை தவிர்க்குமாறும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வீதிகளில் பாடசாலை மாணவர்களை சோதனையிடுவதையும், காணொளி பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்