2022ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதுவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அமைப்புகளில் 7 அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய,
1. ஐக்கிய காங்கிரஸ் கட்சி
2. இரண்டாவது தலைமுறை
3. ஶ்ரீ லங்கா சமூக ஜனநாயகக் கட்சி
4. நாட்டுப்பற்றாளர் ஐக்கிய தேசியக் கட்சி
6. மக்கள் அறிவுசார் முன்னணி
7. ஈரோஸ் ஜனநாயக முன்னணி
3. ஜனநாயக மக்கள் காங்கிரஸ். ஆகியவற்றுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 28ஆம் திகதி கூடிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட முடிவு எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை இலங்கையில் 79 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 7 அரசியல் கட்சிகளுடன் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.