சமுர்த்தி நிவாரண அட்டை உங்களுக்கும் கிடைக்க வேண்டுமா?

0
788

சமுர்த்தி நிவாரண அட்டையை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்  எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச கிராம உத்தியோகஸ்தர், சமுர்த்தி உத்தியோகஸ்த்தர் அல்லது அபிவிருத்தி உத்தியோகஸ்த்தரின் கையொப்பத்துடன் பிரதேச செயலகத்தில் விண்ணப்பதாரர்கள் ஒப்படைக்கலாம் என நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு அமைவாக ,

அரச உத்தியோகத்தர் சார்ந்த குடும்பங்கள் , தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்த குடும்பங்கள், ஒரே குடும்பத்தில் கணவன்- மனைவி விண்ணப்பித்தல்
வேறு ஒரு அரச உதவித்தொகை பெறுபவர்கள் என்போர் இதிலிருந்து தவிர்க்கப்பட வேண்டியவர்களாவர்.

ஏற்கெனவே மேற்சொன்ன ஏதாவது அடிப்படையில் நிவாரணம் பெறுபவர்களாயின் அவர்களை நீக்குதல் வேண்டும். இவ் பயனாளர் தெரிவில் GS, Samurdhi என்பவர்களோடு August 30/31 தினகரன் அல்லது லங்காதீபவில் வெளியிடப்பட்ட பிரசுரத்திற்கேற்ப “பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்” விண்ணப்பங்களை பரிசீலித்தல், சோதனை செய்தல் மற்றும் கையொப்பமிடல் (விண்ணப்பித்த விண்ணப்பங்களை ஏற்றல், தற்போதைய பயனாளர்களை நீக்குதல்) அத்தியாவசியமாகும். அவர்களை விடுத்து நடவடிக்கைககளை மேற்கொள்ளக் கூடாது.

இவ் விண்ணப்பங்கள் சமுர்த்திக்கு மாத்திரமல்ல, வயோதிப கொடுப்பனவு, நோய் நிவாரணம், மற்றும் ஏனைய நிவாரணங்களுக்கும் பொருத்தமானது.

தற்போதுள்ள பயனாளர்களில் பொருத்தமற்றவர்களை நீக்குதல், வறிய குடும்பத்தினரை பாகுபாடின்றி உள்வாங்குதல் என்பனவற்றிற்காகவே இவ்வாறான திட்ட முறைமை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டெம்பர் மாதம் இறுதி திகதியே இவ்விண்ணப்பத்திற்கான கடைசி நாளாகும்
மேலதிக தகவல்களை பிதேச கிராம,சமுர்த்தி,அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here