பொகவந்தலாவை மேற்பிரிவில் எரிந்த நிலையில், சிறுத்தைப்புலியின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தை எரிந்த நிலையில் இருந்ததைக் கண்ட தோட்ட மக்கள் மஸ்கெலியா, வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது.
குறித்த சிறுத்தையின் வாயில் பற்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.