பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் கொழும்பில் நினைவேந்தல் நிகழ்வு

0
192

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு வெள்ளவத்தையில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
அதேவேளை, இந்த நிகழ்வு நடைபெற்ற இடத்தில் மற்றுமொரு குழு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டது. நிகழ்வு நடைபெற்றபோது பொலிஸாரின் பாதுகாப்புடன் எதிர்ப்பு வெளியிட்ட குழுவினர் கோஷம் எழுப்பினர்.

இதன்போது நிகழ்வில் பங்கேற்ற சிவில் சமூக ஆர்வலர் ஒருவர் பலாத்காரமாக கைது செய்யப்பட்டார்.

சிங்கள, தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை வெள்ளவத்தை கடற்கரையில் நடாத்தியபோது இந்த எதிர்ப்புகளை சந்தித்தனர்.
ஆனாலும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை திட்டமிட்டவாறு ஏற்பாட்டாளர்கள் நடாத்தி முடித்தனர்.

பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். தீபமேற்றி வணக்க நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இதன்போது சமயத் தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here