மக்கள் விரும்பாத எந்தவொரு வேலைத்திட்டங்களும் தேசிய மக்கள் சக்தியில் முன்னெடுக்கப்படமாட்டாது

0
42

மக்கள் விரும்பாத எந்த ஒரு வேலைத்திட்டத்திட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் முன்னெடுக்காது என பெருந்தோட்டம் சமுக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் .

31.01.2025. வெள்ளிக்கிழமை அட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார் .

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர்.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டமானது முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கடந்த வீட்டுத்திட்டத்தில் பல்வேறு ஊழல்கள் இடம் பெற்றிருப்பதாக விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது .அது மட்டுமின்றி கட்டுமாண பணிகளிலும் பாரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளன.

 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் 5400வீடுகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மலையக மக்களும் இந்த நாட்டில் கெளரவமான பிரஜைகளாக வாழ்வதற்கு எங்களுடைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையக மக்களின் தீர்வுகள் குறித்து எங்களது பிரகடனத்தில் தெளிவாக கூறியிருக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காரணம் கிடையாது கடந்த கால ஆட்சியாளர்களிடம் முறையான திட்டமிடல் இருக்கவில்லை இந்த அரிசி பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வுகள் வழங்கப்படும் இனிவரும் காலங்களில் அரிசி தட்டுபாடு என்பதற்கு பேச்சி கிடையாது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக வலுவாக ஆராய்ந்து வருகின்றோம் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுக்கு நல்லதொரு அறிவிப்பு வெளிவரும் தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்கவும் நாம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம்.

இதேவேளை தோட்ட தொழிலாளர்கள் கெளரவமாக வழகூடிய ஒரு சம்பளத்தை எமது அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக்கொடுப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here