மனித பாவனைக்குத் தகுதியற்ற 12000 கிலோ தேயிலைத் தூள்கள் மீட்பு

0
92

உடுநுவர, தவுலகல ஹன்டெஸ்ஸ பிரதேசத்தில் உள்ள தேயிலை களஞ்சியசாலையில் மனித பாவனைக்குத் தகுதியற்ற 12000 கிலோ தேயிலை துாள்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அனுமதியின்றி இரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த கழிவு தேயிலை துாள் 426 பொலித்தின் பைகளில் இருந்ததாக கூறப்பட்டது.

கம்பளை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நளின் உதாரம்பவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த களஞ்சியசாலை சோதனையிடப்பட்டுள்ளது.

தவுலகல, வெலம்பொட, வடதெனிய ஹன்டெஸ்ஸ, லீமகஹகொடுவ,பூவலிகட உள்ளிட்ட உடுநுவர பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பல வருடங்களாக இந்த கலிவு தேயிலை வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் சிலோன் டீயின் பெயருக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலைகளில் இருந்து அகற்றப்படும் கழிவு தேயிலையை கொண்டுவந்து சீனி, தேன், சாம்பல் சுண்ணாம்பு என பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்தி கறுப்பு தேயிலை தயாரித்து இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் சந்தைக்கு விற்க்கின்றனர்

இந்த தேயிலை கையிருப்புடன் அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கம்பளை விஷேட அதிரடிபடை பொறுப்பதிகாரி நளின் உதாரம்ப பொலிஸ் பரிசோதகர் கே.டி. விக்ரமரத்ன மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here