மலம் கழிக்கச் சென்ற கைதி தப்பியோட்டம்

0
268
The police said that an incident in which a prisoner escaped after going to defecate (26) took place in the Kaluwanchikudi court complex, Batticaloa.

மலசலம் கழிக்கச் சென்ற கைதியொருவர் தப்பியோடிய சம்பவமொன்று (26) மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டனை வழங்கப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கைதியை நேற்று (26) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக சிறைக்காவலர்கள் அழைத்துச் சென்று அங்குள்ள கூண்டில் அடைத்து வைத்தனர்.

இந்நிலையில், குறித்த கைதி பகல் 12 மணியளவில் கூண்டில் இருந்து மலசலம் கழிப்பதற்காக சிறைக்காவலர் அழைத்துச்சென்று மலசலம் கழிப்பதற்கு விட்டுவிட்டு வெளியில் இருந்துள்ள நிலையில் கைதி மலசல கூரையை கழற்றி அதனூடாக தப்பியோடியுள்ளார்.

இதனையடுத்து, பொலிஸாரும் சிறைக்காவலர்களும் அவரை தேடிவருவதாக தெரிவித்தனர்.

கனகராசா சரவணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here