மலேசியாவின் புதிய பிரதமரானார் இப்ராஹிம்

0
226

மலேஷியாவின் 10 ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிமை நியமிப்பதற்கு மலேஷிய மன்னர் சுல்தான் அப்துல்லா அஹமத் ஷா சம்மதம் அளித்துள்ளதாக அந்நாட்டு அரண்மனை இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மலேஷிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 112 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் பெரிகத்தான் நெஷனல் (தேசியக் கூட்டணி) 73 ஆசனங்களை வென்றுள்ளது.

மலேஷியாவின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது.

222 ஆசனங்களுக்கான இத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிமின் பக்காதான் ஹராப்பான் எனும் கூட்டணி (நம்பிக்கை கூட்டணி) 82 ஆசனங்களை வென்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here