2022 ஆம் வருடத்துக்கான அகில இலங்கை தமிழ் தினப் போட்டிகளில் மத்திய மாகாணத்திற்குட்பட்ட 15 கல்வி வலயங்களுக்கு இடையிலான பிரிவு 04 கட்டுரை ஆக்கப்போட்டியில் அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட டங்கல் தமிழ் வித்தியாலய மாணவி ரா.கௌசல்யா மூன்றாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பாடசாலைக்கு பெருமை தேடி தந்த மாணவியை வாழ்த்துவதோடு வெற்றிக்கு அர்ப்பணிப்போடு அயராது உழைத்த பாடசாலையின் தமிழ் பாட ஆசிரியை திருமதி. வி. பிரதீபா அவர்களையும் பாராட்டுவதாகவும் டங்கல் த.வி அதிபர் எ.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
எம்.கிருஸ்ணா