பிரபல ஹோட்டல் ஒன்றிலிருந்து வாங்கிய மாலுபாணில் லைட்டர் பாகங்கள் காணப்பட்டதாக பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
பாணந்துறை அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா என்பவர் (08) காலை தனது இரண்டு மகன்களுக்காக இரண்டு மாலு பாண்களை கொள்வனவு செய்துள்ளார். இளைய மகன் மாலுபாணின் ஒரு பகுதியை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதில் லைட்டரின் உலோக பாகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, குறித்த பெண் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகருக்கு குறித்த விடயம் தொடர்பில் அறிவித்ததையடுத்து, அவர் விடுமுறையில் இருப்பதாகவும் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறுமியின் தந்தை பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குச் சென்றதாகவும், முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாமல் தான் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தார்.