மியான்மார் அகதிகளை நாடுகடத்துவதை கண்டித்து மட்டு.வில் ஆர்ப்பாட்டம்

0
17

மியான்மார் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரீசீலனை செய்யக்கோரி மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்னாள் இன்று வெள்ளிக்கிழமை (17) பொது மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு விவசாய சம்மேளனம் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் இந்த அரசின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்ததையடுத்து வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு தொழுகையின் பின்னால் அங்கு ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், விவசாய சம்மேளன தலைவர் சுந்தரேசன் உட்பட பொதுமக்கள் ஒன்று திரண்டனர்

இதனை தொடர்ந்து ராஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியான்மாருக்கு திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை அமுல்படுத்து, யு.என்.எச்.சி.ஆர். அப்பாவி மியான்மார் அகதிகளை பெறுப்பெடுத்து புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு பராப்படுத்து, மியான்மாரில் மேலும் ஒலு இலச்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதியை கிளப்பாதே, போன்ற பல வாசகங்கள் ஏந்தியவாறு கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடு;பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு ஆர்பாட்ட காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கனகராசா சரவணன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here