நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தபாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனதிபதி ரணில் விக்கரமசிங்க அவர்கள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் 41 இலட்சம் மாணவர்களுக்கு பல்வேறு நன்மை பயக்கும் என்பதுடன் பெற்றோர்களின் சுமையும் குறைவடையும், சுரக்ஷா காப்புறுதி திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை மாணவர்களுக்கான வரப்பிரசாதமாகும் என்வும் குறிப்பிட்டார்.