மட்டக்களப்பு ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் தேர்தல் காலங்களில் சில விடையங்களில் தூங்கி நிற்பது கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உரிய அதிகாரங்கள் தொடர்பாக 1989 ம் ஆண்டு அரசின் பொது நிர்வாக அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரம் அதன் பிரகாரம் வழங்கப்பட்ட செயலகங்கள் இயங்கி வருகின்றன அதில் ஒன்று கல்முனை தமிழ் பிரதேச செயலகம்.
அந்த செயலகங்களுக்கு சில அதிகாரங்களை வழங்காது தடுத்து வைப்பது என்பது இலங்கை அரசாங்கம் ஒரு இனத்துக்கு சார்பாக நடப்பதை நிரூபிப்பதற்கான ஒரு செயற்பாடு அரசை பொறுத்தமட்டில் பிரதேச செயலகத்தை இயங்க வைப்பது என்பது அந்த பகுதியில் வாழுகின்ற மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு நிர்வாக கட்டமைப்பாகும்
அந்த நிர்வாக கட்டமைப்பில் சில நிதி, காணி தொடர்பான விடையங்களை அந்த பிரதேசத்துக்கு வழங்காமல் தடுக்கப்பட வேண்டும் என முன் வைத்தது ஒரு முஸ்லீம் அமைச்சர் அவரின் கருத்துக்களை கேட்டு இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு துரோத்தை விளைவிக்க முயற்சி செய்வதை கண்டிக்க கூடிய விடையமாகும்.
இலங்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு பதிலாக வேறு யாராவது ஜனாதிபதி இருக்கின்றாரே? முழு அதிகாரம் உள்ளவர் ஜனாதிபதி தொலைபேசி ஊடாக உடனடியாக வர்தமானி வெளியீட்டை உருவாக்கி அமைச்சரவை தீர்மானித்து அமுல்படுத்து சொல்வது நிமிடக்கணக்கான வேலை இப்படிப்பட்ட வேலையைக் கூட செய்யாத ஜனாதிபதி.
நீங்கள் வாக்களியுங்கள் நிறைவேற்றி தருகின்றோம் என சொல்வது அரசின் தவறான கட்டமைப்பு செயற்பாட்டை சர்வதேசமே வெட்கி தலை குனியவேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் நடக்க போகின்றது பல கோரிக்கைகளை பல கட்சிகள் முன்வைக்கின்றனர். என்ன சொல்லப்படுகின்றது என்றால் தேர்தலுக்கு பிற்பாடு அமுல்படுத்தப்படும்.
ஏன் என்றால் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு அனைவரது வாக்கும் தேவை நீங்கள் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளீர்கள் இது சரியானவை இதை நாங்கள் நடைமுறைப்படுத்துவது என சொல்வது அம்பாறை மாவட்ட தமிழர்களை மீண்டும் ஏமாற்றும் செயற்பாடாகும்.
ஆகவே தேர்தலுக்கு முன்னாடி கல்முனை வடக்கு பிரதேசம் தொடர்பான அதிகாரங்கள் அமுல்படுத்துவதற்கான உத்தரவை வழங்கி கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சனை தீர்கப்படவேண்டும்.
அதேவேளை ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கு வினயமாக வேண்டுNhகாள் விடுக்கின்றேன் அது தியேட்டர்காரராக இருக்கலாம் அபிவிருத்தி குழு தலைவராக இருக்கலாம் இராஜாங்க அமைச்சரா இருக்கலாம் யாராகா இருந்தாலும் உங்களுக்கு சவால்விடுக்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்ட சமூகத்திற்கு சேவை செய்ய துணிவிருந்தால் மாதவனை மயிலத்தமடு மேச்சல்தரை விவகாரம் ஜனாதிபதி தலமையில் நடந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது அதனை நடைமுறைப்படுத்துவது அரச நிர்வாகம் எனவே ஆளும் தரப்பு அமைச்சராகவும், அமைப்பாளராகவும் ஜனாதிபதிக்கு கொடி பிடிக்கின்ற நீங்கள் முடிந்தால் தேர்தலுக்கு முன்னாடி மாதவனை மயிலத்தமடு தீர்கப்படவேண்டும் அதனை செய்தால் Salute அடிக்க தயார் என்றார்.