யாழில் பிரதியமைச்சருடன் அபிவிருத்தி சபையின் பணியாளர்கள் , உத்தியோகத்தர்கள் சந்திப்பு

0
58

பெருந்தோட்ட , சமூக உட் கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் பனை அபிவிருத்தி சபையின் பணியாளர்கள், உத்தியோகத்தர்கள், ஏற்றுமதி யாளர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலருடன் (18) பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் யாழ்ப்பாணம் கைத் தடியில் உள்ள மாகாண சபை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதுடன் மிக நீண்ட நேரமாக இடம் பெற்ற இக்கலந்துரையாடலி ல் துறை சார்ந்த கருத்துக்களை முன் வைத்ததுடன் கடந்த காலங்களில் பனையுற்பத்தியில் பெற்றுக் கொண்ட வருமானங்கள் இனிவரும் காலங்களில் தேசிய உற்பத்தியில் பனை சார்ந்த உற்பத்திகளை எவ்வாறு அதிகரிப்பது, நவீன முறையில் உற்பத்தி செய்தல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பாகவும், பனை உற்பத்தியாளர்கள், ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் தானும் ஒரு தோட்ட புறத்தை சார்ந்தவர் என்ற ரீதியில் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நான் அறிவேன் தொடர்ந்து இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தீர்வினை பெற்று தருவதாகவும் எதிர்காலங்களில் பனை உற்பத்தி துறையில் அதிக இலாபமீட்டுவதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னெடுக்குமாறும் பணிபுரை விடுக்கப்பட்டதுடன், வளப்பற்றாக்குறை, மனிதவள பற்றாக்குறை சம்பந்தமாக பிரதி அமைச்சர் விரைவில் தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்தார்.

ஊடகப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here